Tuesday, 1 August 2017

குவைத்திற்கு பணிப் பெண்களாக சென்று பல்வேறு இன்னல்களை சந்தித்த 26 பெண்கள் நாடு திரும்பினர்!

தொழில் வாய்ப்புக்காக குவைத் நாட்டுக்குச் சென்று அங்கு பல்வேறு இன்னல்களை அனுபவித்த 26 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
நேற்று(31-07-2017) காலை 6.20 மணியளவில் இவர்கள் இலங்கையை வந்தடைந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை, குருணாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே இன்று நாடு திரும்பியுள்ளனர்.
பல்வேறு காரணங்களால், குவைத் நாட்டில் உள்ள இலங்கை த் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களிலும், அந்நாட்டு அரசு நடத்தும் நலன்புரி நிலையங்களிலும் 121 இலங்கை பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Author: verified_user

0 comments: