இதயத்தில் குத்திய ஆணியுடன் 20 கிலோமீற்றர் பயணித்த நபர்! அமெரிக்காவில் சம்பவம்

Published On Monday, 21 August 2017 | 16:38:00

இதயத்தில் குத்திய ஆணியை அகற்றாமல் சுமார் 20 கிலோமீற்றர் தூரம் சிற்றூர்ந்தை ஓட்டிச் சென்று நபர் ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் 52 வயதாகும் டாக் பெர்க்சன் என்பவர், தனது வீட்டில் மரவேலைகள் செய்து கொண்டிருந்த போது, தவறுதலாக ஆணி அடிக்கும் இயந்திரத்திலிருந்து, ஒரு ஆணி இவரின் மார்பில் பாய்ந்துள்ளது.

ஆணி மிக ஆழமாகச் சென்று இதயத்தில் பாய்ந்திருப்பதை உணர்ந்த அவர், அந்த ஆணியைப் பிடுங்காமல் தனது சிற்றூர்ந்தை 20 கிலோமீற்றர் ஓட்டிச் சென்று மருத்துவமனையை அடைந்துள்ளார். 

மருத்துவர்கள் அவரை உடனடியாக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து, அறுவை சிகிச்சை மூலம் ஆணியை எடுத்து, காயத்தையும் சரி செய்துள்ளனர்.

'இதயத்தின் முக்கியமான பகுதிக்கு மிக அருகில் ஆணி குத்தி இருந்தது. இன்னும் சற்று ஆழமாக குத்தி இருந்தால், அவரின் உயிரை காப்பாற்றி இருக்க முடியாது' என, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், டாக் தனது புத்திசாலித்தனம் மற்றும் சமயோசிதத்தால் தனது உயிரை தானே காப்பாற்றியுள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved