அமீரகத்தில் நிலவும் கடும் வெப்பத்தால் 2 வாகனங்கள் எரிந்து சாம்பல் !

Published On Friday, 4 August 2017 | 12:32:00


அமீரகத்தில் தற்போது சுமார் 50 டிகிரி செல்ஷியஸ் வெப்பம்  'வச்சு செய்து வருகின்றது' அறிந்ததே. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2 தனித்தனி சம்பவங்களில் 2 வாகனங்கள் கடும் சூட்டால் தீப்பற்றி எரிந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (புதன்) காலை சுமார் 10.30 மணியளவில் உம்மல் குவைன் எமிரேட்டில் அல் இத்திஹாத் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று சூட்டால் திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலானது. தீயணைப்புத் துறையின் தீ மேலும் அருகிலுள்ள கடைகளின் மீது பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்(அதிரைநியூஸ்).

அதேபோல் அபுதாபியிலிருந்து துபை மீடியா சிட்டிக்கு 27 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த மினி பஸ் ஒன்றும் கிட்டதட்ட அதேநேரத்தில் ஷேக் ஜாயித் ரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலானது. உடனடியாக களத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மினி பஸ்ஸில் இருந்த 27 பேரையும் மீட்டதுடன் சாலைகளில் தடுப்புக்களை ஏற்படுத்தி தீ பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

வாகனங்கள் தீப்பற்றாமல் இருப்பதற்கான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
1. வாகனங்களை குறித்த காலக்கெடுவில் முறையாக வேலை தெரிந்த டெக்னீஷியன்களிடம் சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும்.

2. தினமும் தவறாமல் வாகனத்தில் உள்ள தண்ணீர் மற்றும் வெப்ப அளவை கண்காணித்து வர வேண்டும்.

3. எண்ணெய் சிந்துதலை தவிர்ப்பதற்காக டேங்க் மூடிகளை இறுக்கமாக மூடி வைக்கவும்.

4. வாகனத்தினுள் அல்லது அதன் அருகில் இருந்து புகைப் பிடிப்பதை எப்போதும் தவிர்க்கவும்.(அதிரைநியூஸ்)

5. பங்க்குகளில் எண்ணெய் நிரப்பும் போது எப்போதும் வாகன எஞ்சின் இயக்கத்தை நிறுத்தி விடவும்.

6. எளிதில் தீப்பற்றக்கூடிய எத்தகைய பொருட்களையும் வாகனத்தில் விட்டுச் செல்லாதீர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved