குவைத் சென்று காணாமல் போன மனைவி! 17 வருடங்களாக தேடிக் கொண்டிருக்கும் இலங்கை கணவன்

Published On Monday, 21 August 2017 | 16:24:00

இலங்கையிலிருந்து குவைத் சென்ற தனது மனைவி குறித்து 17 வருடங்களாக எந்த தகவலும் இல்லை என நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹொரவப்பொத்தான, மரதன்கடவல பகுதியைச் சேர்ந்த எச்.எம் சந்திரலதா என்பவரே இவ்வாறு குவைத் சென்று காணாமல் போயுள்ளார்.
கடந்த 2001ஆம் ஆண்டு தனது மனைவி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினூடாக குவைத் சென்றதாகவும், அதன் பின் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் காணாமல் போன பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், எனினும் இதுவரை குறித்த முறைப்பாடு தொடர்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved