பறக்கும் விமானத்தில் வைத்து 16 வயது அழகிய பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்திய மருத்துவர்

Published On Monday, 7 August 2017 | 01:32:00

இந்திய மருத்துவர் ஒருவர் அமெரிக்காவுக்கு விமானத்தில் பயணம் செய்த போது 16 வயது இளம்பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த காரணத்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த டாக்டர் விஜயகுமார் கிருஷ்ணப்பா(28) என்பவர் அமெரிக்க மருத்துவமனைகளில் அளிக்கப்படும் ஒருமாதகால சிறப்பு பயிற்சிக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் சியாட்டெல் நகரில் நியூ ஜெர்சி செல்லும் யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இவர் பயணம் செய்தபோது, அருகில் தூங்கிகொண்டிருந்த 16 வயது அழகிய பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
தூக்கத்தில் இருந்து விழித்த அந்த பெண் அவரது கையை தட்டிவிட்டு மறுபடியும் தூங்க ஆரம்பித்துள்ளார், ஆனால் மருத்துவர் மறுபடியும் விடாப்பிடியாக அந்த பெண்ணை கட்டிப்பிடித்து தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அப்பெண் விமான அதிகாரிகளிடம் புகார் அளித்ததையடுத்து அந்த நபர் கண்டிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த பெண் தனது பெற்றோர்களிடம் நடந்தவை குறித்து தெரிவித்துள்ளார்.
அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண்ணின் பெற்றோர் யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்தவர்களின் பெயர் பட்டியல் மற்றும் கமெராக்களில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலம் தன்னிடம் அத்துமீறிய விஜயகுமார் கிருஷ்ணப்பாவை பாதிக்கப்பட்ட இளம்பெண் அடையாளம் காட்டினார்.
இதையடுத்து, பெண்ணிடம் பாலியல் ரீதியாக வரம்பு மீறியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
போகும் இடத்தை அடையாளம் காட்டும் கருவியை விஜயகுமார் உடலில் பொருத்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved