Breaking News

கத்தாரிலிருந்து தரைவழியாக 1000க்கும் மேற்பட்டவர்கள் சவூதியை வந்தடைந்தனர்

1000க்கு மேற்பட்டவர்கள் கத்தாரிலிருந்து சவூதி அரேபியாவுக்குள் தரைவழியாக பிரவேசித்துள்ளதாக சவூதியின் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜுன் மாதம் ஏற்பட்ட கத்தார்-சவூதிக் கூட்டணியின் முறுகலைத் தொடர்ந்து சவூதி அரேபியா கத்தாருடனான வான் மற்றும் தரைவழிப் போக்குவரத்தை நிறுத்திக் கொண்டது. 

ஆனால் கடந்த வாரம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் வகையில் மன்னர் சல்மானித் உத்தரவின் பேரில் தரைவழிப் போக்குவரத்துக்கான கதவைத் திறந்து விட்டது. இதன் பிற்பாடு 1000க்கு மேட்பட்ட கத்தார் பிரஜைகள் தரை வழியாக சவூதிக்குக் வந்துள்ளதாக சவூதி அறிவித்துள்ளது. 

ஆங்கிலத்தில் அரப் நியூஸ்
தமிழில் - உண்மையின் பக்கம்

No comments