Wednesday, 16 August 2017

1000 பாலஸ்தீனியர்களுக்கும் இலவசமாக ஹஜ் கடமைகளை நிறைவேற்ற சவூதி மன்னரின் சிறப்பு ஏற்பாடுகள்....!

இஸ்ரேலிய இராணுவத்தினரின் தாக்குதல்களில் உயிரிழந்த பலஸ்தீன குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கு இவ்வருடம் விசேட ஹஜ் ஏற்பாட்டை செய்து கொடுத்துள்ளதாகவும் அவர்களை அழைத்து வர சிறப்பு விமானங்களை அனுப்பியுள்ளதாகவும் சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
ஜோர்தானிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இவ்வாறு அழைத்துவரப்படவுள்ள ஹஜ்ஜாஜிகளுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் சவூதி மன்னரின் முக்கிய பணிப்புரைக்கமைய செய்து கொடுத்துள்ளதாக சவூதி கெஸட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் - சவூதி கெஸட்
தமிழில் - முஹம்மது ஹாஸில்

Author: verified_user

0 comments: