Saturday, 1 July 2017

ஜேர்மனியில் வரலாறு காணாத மழை, வெள்ளம்: தத்தளிக்கும் பெர்லின் (VIDEO)

ஜேர்மனியின் பெர்லினில் கடும் மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நண்பகலில் தொடங்கிய மழை பல மணிநேரத்துக்கு நீடித்தது.
இதனால் தலைநகர் பெர்லினின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
மழை நீரை ராட்சத கருவிகள் கொண்டு வெளியேற்றும் முயற்சியில் மீட்புப்படையினர் செயல்பட்டு வருகின்றனர், இவர்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து செயல்படுகின்றனர்.
110 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் மழை பெய்துள்ளதாக Bild நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

Author: verified_user

0 comments: