Monday, 17 July 2017

செயலிழந்த QATAR VODAFONE NETWORK 12 மணி நேரத்துக்கு மேலாகியும் வழமைக்குத் திரும்பவில்லை.

இன்று(17-07-2017) காலை சுமார் 4 மணியளவில் செயலிழந்து போன கத்தார் VODAFONE NETWORK 12 மணித்தியாலங்களுக்கு மேலாகியும் இன்னும் சரி செய்யப்பட்டு வழமைக்குத் திரும்பாமை அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. காலையில் விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்பதாக உத்தியோப பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்னும் சரி செய்யப்படவில்லை...

இது தொடர்பாக VODAFONE NETWORK மற்றும் ஒரு உத்தியோக பூர்வ மறு அறிவித்தலை அதனது டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கம் ஊடாக விடுத்துள்ளது. அதில் ”இன்று காலை சேவை மேம்படுத்தல் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எமது தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போது பிரச்சினையை தீர்க்க ஓய்வின்றி பணிபுரிந்து கொண்டு இருக்கின்றார்கள். சேவை மீள் இணைப்பு தாமதாவற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக அறிவித்துள்ளது”

QATAR VODAFONE NETWORK  செயலிழப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் அவை உறுதிப்படுத்தப்படாக ஊகத்தின் அடிப்படையின் கருத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: