Breaking News

கத்தார் விவாகரம் மெளனம் சாதிக்கும் குவைத்.

வளைகுடாநாடுகளுடன் ராஜிய உறவை புதுப்பிப்பது குறித்து 13 நிபந்தனைகள் கத்தாருக்கு விதிக்கப்பட்டன. அவற்றை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை 5ம் தேதிக்குள் தெரிவிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கத்தாரின் முடிவுகள் குவைத் அரசரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் கடந்தும் குவைத் தரப்பில் இருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி வருகிறார்.

சவுதி அரேபியா, அபுதாபி, கத்தார் அரசுகளுடன் அவர் தொடர்புகொண்டு நிலைமையை தெரிந்துகொண்டார். பிற நாட்டு தலைவர்களுடன் அவர் பேச உள்ளார்.

கத்தார் அளித்துள்ள அறிக்கையையும் அமெரிக்கா பார்வையிட்டு உரிய ஆலோசனைகள் சொல்லும் என தெரிகிறது. இதற்காகவே குவைத் மவுனம் சாதிக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments