Saturday, 15 July 2017

போதையால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! பொலிஸாரிடம் சிக்கிய முக்கிய தடயம்!

பொலனறுவை - மெதிரிகிரிய கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஒரு பாடசாலையில் 41 மாணவ, மாணவிகள் தமது கைகளை வெட்டிக் கொண்ட சம்பவம் தொடர்பில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறித்த 41 மாணவ, மாணவிகளையும் பொலிஸார் பொறுப்பேற்று பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது அவர்கள் பயன்படுத்திய போதைப்பொருள் அடங்கிய பை ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களை அழைத்துச்செல்லும் போது அவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் போதைப்பொருள் அடங்கிய பை, ஒரு மாணவனின் கையில் இருந்துள்ளது. இதை அந்த மாணவன் பொலிஸ் வாகனத்துக்கு வெளியே வீசியுள்ளார்.
இதை அவதானித்த பொலிஸார் குறித்த போதைப்பொருள் அடங்கிய பையை கைப்பற்றியுள்ளனர்.
இந்த போதைப்பொருள் பாடசாலைக்கு எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும், இதனை யார் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்தனர் என்பது குறித்தும் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுவொன்று நேற்று பாடசாலைக்கு சென்று விசாரணைகளை நடத்தி சாட்சிப் பதிவுகளை முன்னெடுத்திருந்தது.
மேலும், பொலனறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி விஜேரத்னவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: