கத்தார் தம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத வரை சமாதானத்திற்கு தயார் இல்லை என சவூதி கூட்டணி அறிவிப்பு...!

Published On Monday, 31 July 2017 | 11:39:00

பிராந்தியத்தில் தீவிரவாதம் வளர்வதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் கத்தார் நேர்மையுடன் பங்களிக்கத் தயார் என்றால் மாத்திரமே அந்நாட்டுடன் இனி சமாதானம் ஏற்படும் என எச்சரித்துள்ளது சவூதி கூட்டணி.

சவூதி, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நேற்று(30-07-2017) பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் சந்தித்து இவ்விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடியதன் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லையென கத்தார் மறுத்து வருகின்ற போதிலும் இஹ்வான்கள், ஈரானுடனான தொடர்பைக் கத்தார் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியே சவூதி கூட்டணி நாடுகள் இவ்வாறு தெரிவித்து வருவதுடன் ராஜதந்திர உறவுகள் தடைப்பட்டதன் பின்னணியில் கத்தார் நிர்வாகத்தை விட பொது மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதைத் தாம் அறிவோம் எனவும் இன்று தெரிவித்துள்ளன.

எனினும், கத்தார் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது மீண்டும் சமாதானம் சாத்தியமாகப் போவதில்லையென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved