Monday, 24 July 2017

துருக்கி அதிபர் எர்துகான் கத்தாரை வந்தடைந்தார், விமான நிலையம் வரை சென்று வரவேற்ற கத்தார் அதிபர்!

துருக்கி அதிபர் ரசீப் தய்யிப் எர்துகான் இன்று திங்கட்கிழமை கத்தாரை வந்ததடைந்துள்ளார். மத்திய கிழக்கிற்கான உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள எர்துகான் நேற்று சவூதி அரேபியாவைச் சென்றடைந்தார். அங்கு மன்னர் சல்மான், முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மான் போன்றவர்களை தனித்தனியாக சந்தித்தார். 
அதன் பின்னர் குவைத்துக்கு சென்று கத்தார் அரபு நாடுகளுக்கிடையில் உள்ள பிணக்குகளை தீர்க்க மத்தியஸ்தராக செயற்பட்ட குவைத் அதிபரையும் சந்திந்து விட்டு இன்று திங்கட் கிழமை கத்தார் ஹமத் விமான நிலையத்தை வந்தடைந்தார். 
கத்தார் அதிபர் தமீம் அல் தானி அவர்கள் நேரடியாக விமான நிலையம் சென்று வரவேற்றுள்ளதாக பெனின்சுலா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் துருக்கி - கத்தார் போன்ற நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள், மற்றும் கத்தார் - அரபு நாடுகளுக்கிடையிலான பிணக்குகள் பற்றி முக்கிய பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
கத்தார் மற்றும் அரபு நாடுகளுக்கிடையில் பிரச்சினை ஏற்பட்ட போது கத்தாருக்கு தோள் தோளோடு தோள் நின்று உதவி செய்த நாடுகளில் துருக்கி முன்னிலை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: