ஊழியர்களை கண்காணிக்க உடலில் மைக்ரோசிப் செலுத்தும் நிறுவனம்

Published On Saturday, 29 July 2017 | 15:13:00

அமெரிக்காவில் தனியார் கம்பெனி ஒன்று ஊழியர்களை கண்காணிக்க உடலில் மைக்ரோசிப்பை செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் பிரபல தனியார் கம்பெனி ஒன்று அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை கண்காணிக்கவும், அவர்களின் வசதிக்காகவும், அவர்களுடைய உடலில் இந்த மைக்ரோசிப்களை செலுத்த திட்டமிட்டுள்ளது . ஊழியர்களின் விருப்பத்துடன் இது செலுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் தேவையை நிறைவேற்றிகொள்ளவே இந்த மைக்ரோசிப்களை உடலில் பதியப்படுகிறது. இந்த மைக்ரோசிப் மூலம் ஊழியர்கள் அலுவலகத்திற்குள் நுழைய தங்கள் கைகைகளை ஸ்வைப் செய்தாலே போதுமானது. மேலும் கம்யூட்டரை லாகின் செய்யவும், கதவுகளை திறக்கவும், அலுவலகம் சார்ந்த பணிகளுக்கு பணம் செலுத்தவும் இது பயன்படும். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் இந்த மைக்ரோசிப்களை உடலில் செலுத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் செயல்படுத்தபட உள்ளது.

இது குறித்து இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

மைக்ரோசிப்களை ஊழியர்களின் உடலில் செலுத்தப்படும் போது ஒரு ஊசி போல உணர்வினை மட்டுமே வெளிப்படுத்தும். ஊழியர்களைக் கண்காணிப்பதற்காக மட்டும் இது பயன்படுத்தபடமாட்டாது என அவர் கூறினார்.

உலகிலேயே முதன் முறையாக 2017, ஏப்ரல் 3-ம் தேதி ஸ்வீடன் நிறுவன ஒன்று தனது ஊழியர்களின் உடலில் மைக்ரோசிப்களை உட்பொதித்தது குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved