Monday, 17 July 2017

கத்தார் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மது போத்தல்கள், கஞ்சா, புகையிலை போன்றவை பறிமுதல்!

கத்தாரின் துறைமுகத்தில் மிகப்பெரும் அளவில் மதுபான போத்தல்களும், கஞ்சா போன்றவைகளும் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கத்தார் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவற்றில், 21,616 மதுபான போத்தல்கள், 19 தொன் மென்று தின்னக் கூடிய புகையிலை மற்றும் 17 கிலோ கஞ்சா போன்றவை அடங்குவதாக சுங்க திணைக்களத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன. 

17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது கடந்த ரமழான் காலப்பகுதியிலாகும் என்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி அனைத்து பொருட்களும் மரப் பலகையினால் செய்யப்பட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்டே கொண்டுவரப்பட்டுள்ளன. சந்தேகத்து இடமாகக் காணப்பட்ட இந்த பெட்டிகளை திறந்து சோதனை செய்தபோது கடத்தப்பட்ட பொருட்கள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியிருக்கின்றன. 

பிடிபட்ட பொருட்களின் படங்கள்.



Author: verified_user

0 comments: