Monday, 24 July 2017

கத்தாரிலிருந்து ஹஜ்ஜிற்கு செல்ல முடியும், ஆனால் கத்தார் எயார்வெய்ஸ் மூலம் செல்ல முடியாது. - சவூதி

ஹஜ் மற்றும் உம்றா அனுமதி பெற்றுள்ளோர் கட்டாரிலிருந்து அந்நாட்டின் தேசிய விமான சேவை தவிர்ந்த வேறு விமான சேவைகள் மூலம் நேரடியாக சவுதி வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் எயார்வேஸ் மீதான தடை தொடர்கின்ற நிலையில் இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு தரை மற்றும் கடல் வழிப் பயணங்களுக்கும் இது செல்லுபடியாகும் எனவும் இவ்வாறு அனுமதியுள்ள கட்டார் பிரஜைகள் வேறு நாடுகளிலிருந்தும் பயணிக்க முடியும் எனவும் சவுதி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: