இந்தியாவிலிருந்து சவூதி வேலைக்கு செல்ல இருக்கின்றீர்களா? முதல் இதப் படிங்க! மத்திய அரசு விடுக்கும் செய்தி

Published On Wednesday, 26 July 2017 | 15:58:00

சவூதி அரேபியா நாட்டிற்கு வேலைக்காக செல்லும் இந்தியர்கள் கண்டிப்பாக சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறைகள்
சவுதி அரேபியாவிற்கு செல்வதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை வருமாறு:
  • சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம். 
  • உங்கள் மொபைல் போன் மற்றும் லேப் டாப் கம்யூட்டரில், சவுதியில் தடை செய்யப்பட்ட ஆபாச படங்கள் உள்ளிட்ட விஷயங்களை இடம் பெற செய்ய வேண்டாம். இந்த தடைகளை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் சவுதியில் அமலில் உள்ளது. 
  • பில்லி, சூனியம் போன்றவை சவுதியில் தடை செய்யப்பட்டவை. இதை கடைப்பிடிப்பவர்களுக்கு மரண தண்டனை அளவுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும். எனவே, கறுப்பு கயிறு, மோதிரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 
  • போதை பொருட்கள், பான் மசாலா, பன்றிகறி, இஸ்லாம் தவிர்தத பிற மதங்கள் குறித்த குறிப்புகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். 

வேலைக்கு ஏற்பாடு செய்யும் ஏஜென்ட்களுக்கு சேவை கட்டணமாக, 20 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்க கூடாது என சவுதி அரசு கூறியுள்ளது. சவுதி வேலை வாய்ப்பு அமைச்சகம் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இலவச மொபைல் போன் சிம் கார்டு வழங்குகிறது. 

எனவே, இந்திய ஊழியர்கள் விலை குறைந்த ஸ்மார்ட் போனை கொண்டு சென்றால் போதும்.தங்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளவர்கள் வேலை வாய்ப்பு விசா, ஹஜ் அல்லது உம்ரா விசாவின் கீழ சவுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved