Friday, 14 July 2017

சகோதரியின் மகளுக்கு ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் செய்த செயல்

சிலாபம் பிரதேசத்தில் தனது சகோதரியின் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டுக்காக ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக குறித்த நபர் இவ்வாறு சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அடிக்கடி தனது சகோதரியின் வீட்டிற்கு செல்லும் குறித்த நபர், சகோதரியின் மகளான 8 வயது சிறுமியிடம் இவ்வாறு அத்துமீறி நடந்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த நபர் வருவதைக் கண்டவுடன் சிறுமி பயத்துடனும், வீட்டில் மறைந்து கொள்வதையும் தாய் கவனித்துள்ளார்.
தொடர்ந்து தனது மகளிடம் காரணத்தை கேட்டு அதிர்ந்து போன தாய் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து குறித்த ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாயை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Author: verified_user

0 comments: