Saturday, 15 July 2017

சவூதியில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த உடற்கல்வி வகுப்பு தடை நீக்கப்பட்டது

சவூதி பள்ளியில் பெண்களுக்கு உடற்கல்வி வகுப்பு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை நீக்கும் வகையில் புதிய விதி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சவூதி அரசாங்கம் அறிவித்துள்ள புதிய விதியின் படி பெண்கள் அடுத்த ஆண்டு முதல் உடற்கல்வி வகுப்பில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விதியை கல்வி அமைச்சகம் உறுதிசெய்துள்ளது. சவூதி ஷூரா சபையின் அறிவுறுத்தலின் படி அரசாங்கம் இந்த புதிய விதியை அமல்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவில் பெண்கள் உரிமைகள் குறித்த அணுகுமுறையில் மெதுவாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: