தென்னாசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் தென்னாசிய எல்லைக்குள் வீசா இல்லாமலே விமான பயணங்கள் மேற்கொள்வது தொடர்பான பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான கலந்துறையாடல்கள் சார்க் எல்லை சட்டம் மற்றும் ஒழுங்கு உள்துறை அமைச்சர்களின் மாநாட்டு அமர்வுகளின்போதே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மா நாடானது ஸ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று கொழும்பு, காலி முகத்திடல் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.
சார்க் நாடுகளின் எல்லைகளில் காணப்படும் பயங்கரவாத பிரச்சினை, போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதம் கடத்தல் போன்றவற்றை முறியடிப்பதற்காக எல்லை என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே வீசா தொடர்பான இந்த விடயமும் கலந்துரையாடப்பட்டுள்ளது
0 comments: