Sunday, 30 July 2017

ஹஜ் கடமைகளுக்கு சவூதி நிபந்தனை விதிப்பது மார்க்க விதிகளுக்கு எதிரானது என்கிறது கத்தார்

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதும் அரசியல் மயப்படுத்தப்படுவதாக ஐ.நாவில் முறையிட்டுள்ளது கத்தார்.
ஹஜ் கடமைக்கான அனுமதியுள்ள கத்தார் பிரஜைகள் கத்தார் எயார்வேஸ் தவிர்ந்த ஏனைய விமான சேவைகள் மூலம் சவூதிக்குப் பயணிக்கலாம் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கத்தார் பிரஜைகள் தோஹா ஊடாக பயணித்திருக்க வேண்டும் எனும் நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியே கத்தார் இவ்வாறு முறையிட்டுள்ளது.
வணக்க வழிபாடொன்றுக்கு இவ்வாறு நிபந்தனை விதிக்கப்படுவது சர்வதேச விதிகளை மீறிய செயலாகும் என கத்தார் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Mohamed Hasil)

Author: verified_user

0 comments: