Saturday, 15 July 2017

கத்தார் மீதான தடை: யாருக்குப் பாதிப்பு தெரியுமா? தொடர்ந்து படியுங்கள் (வீடியோ இணைப்பு)

கத்தாருக்கும் சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் இடையே தொடர்ந்துவரும் நெருக்கடியின் காரணமாக கத்தாரிலுள்ள சுமார் 6 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சவூதி அரேபியா, பஹ்ரேன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவை முறித்துக் கொண்டதை அடுத்து, தமது பிரஜைகள் கத்தாருக்கு செல்வதற்கு தடை விதித்ததுடன், கத்தாரிலுள்ளவர்களை விரைவில் நாடு திரும்புமாறும் பணித்தது.
இது தொடர்பில் கத்தாரிலுள்ள பெண்ணொருவர் கூறுகையில், ”நான் 2011ஆம் ஆண்டு பஹ்ரேனை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு மூன்று பிள்ளைகள்.
ஆனால் விவாகரத்து பெற்ற பின்னர் எனது பிள்ளைகள் என்னுடன் கத்தாரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பானது பிள்ளைகளின் குடியுரிமையை பாதிப்பதாக அமைந்துள்ளது.
எனது பிள்ளைகள் கத்தாரில் தொடர்ந்து இருந்தால் அவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், பிள்ளைகளை சுவீடனுக்கு எனது உறவினரிடம் அனுப்பி வைத்துவிட்டு, இங்கு நான் தனித்து வாழ்ந்து வருகிறேன்” என்றார்.

Author: verified_user

0 comments: