Friday, 14 July 2017

வளைந்து கொடுத்தது அமீரகம் : கத்தாரின் அல்-ஜசீராவை மூட வேண்டாம் மாற்றங்கள் செய்யுங்கள்....!

கத்தாருடனான ராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டின் முக்கிய ஊடகமான அல்ஜசீராவை மூடிவிட வேண்டும் என நிபந்தனை விதித்ததன் உள்நோக்கம், குறித்த ஊடகத்தில் அடிப்படை மாற்றங்கள் வரவேண்டும் என்பதேயாகும் என விளக்கமளித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.
இதனடிப்படையில் தீவிரவாத சக்திகளின் பிரச்சாரத் தளமாக இயங்காது கத்தாரின் ஊடகமாக அல்ஜசீரா இயங்குவதில் ஆட்சேபனையிருக்கப் போவதில்லையென கருத்து வெளியிட்டுள்ளார் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் நூரா அல் காபி.
கத்தார் தமக்கான ஊடகம் ஒன்றை இயக்குவதில் யாருக்கும் ஆட்சேபனையில்லை ஆனால் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையிலான அமைப்புகளுக்காக அல்ஜசீரா பிரச்சாரம் செய்வதை நிறுத்தினால் குறித்த விவகாரத்துக்கு (நிபந்தனைப் பட்டியலில்) தீர்வு கிடைக்கும் என அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Mohamed Hasil)

Author: verified_user

0 comments: