Breaking News

சென்னையில் இருந்து புறப்பட்ட துபாய் விமானத்தில் ‘திடீர்’ புகை பயணிகள் அதிர்ச்சி!

சென்னையில் இருந்து புறப்பட்ட துபாய் விமானத்தில் ‘திடீர்’ என புகை வெளியேறியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

துபாயில் இருந்து இன்று அதிகாலை ஒரு விமானம் சென்னை வந்தது. பின்னர் 4.10 மணிக்கு மீண்டும் துபாய் புறப்பட தயாரானது. அதில் 172 பயணிகள் இருந்தனர். இதற்கிடையே புறப்படும் நேரத்தில் விமான என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.

அதைப் பார்த்த விமானி விமானத்தை நிறுத்தினார். பின்னர் விமான என்ஜின் சரி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து காலை 6.50 மணிக்கு அதாவது சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக விமானம் துபாய் புறப்பட்டு சென்றது. என்ஜினில் இருந்து புகை வெளியானதை விமானி சரியான நேரத்தில் பார்த்ததால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது.

No comments