Monday, 17 July 2017

கத்தார் அரச இணையம் & சமூக வளைதளங்கள் ”ஹெக்” செய்யப்பட்டதன் பின்னனியில் துபாய்! வெஷங்டன் போஸ்ட் பத்திரிவகையின் செய்தி!

கட்டார் நாட்டின் அரச இணையத்தளங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூக  வலைத்தளங்களை ஐக்கிய அரபு இராஜ்ஜியம், ஹேக் செய்ய பல திட்டங்களை மேற்கொண்டிருந்ததாக வோஸிங்டன் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டள்ளது.

மே மாதம் 23ம் திகதி ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இதனை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்காவில் உள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தூதுவர் குறித்த செய்தியை முற்றாக மறுத்துள்ள நிலையில், இதனை அமெரிக்க இராஜாங்க பிரிவு உறுதிப்படுத்தவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டார் தொடர்பான போலியான செய்திகளை வெளியிட்டு, அதனை மக்களிடம் பரப்புவதற்கே இந்த ஹேக்கிங் மேற்கொள்ள முயற்சித்தாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அமெரிக்காவின் எப்.பி.ஐ ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Author: verified_user

0 comments: