Breaking News

கூந்தலில் வெடிப்பு உள்ளவரை நீங்கள்? கவலை வேண்டாம்! இதை பின்பற்றுங்க..

காரணம் காலத்திற்கேற்ற வகையில் கெமிக்கல் கலந்த ஷாம்போக்களும் ,மிகவும் வேகமாக தலை முடி சீவுதல் ,ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல் போன்ற காரணத்தினால் முடி அதிகமாக வெடிக்கின்றது.

ஒரு வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து, ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

1 முட்டையின் வெள்ளைக் கருவுடன் பால் கலந்து, தலையில் நன்கு தடவி 20 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஈரமான தலைமுடியில் ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய அனைத்தையும் சரிசமமாக எடுத்து, அதை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இவ்வாறு மேற்குறிப்பிட்டவற்றை பின்பற்றும் பட்சத்தில் தலைமுடி வெடிப்பது குறைந்துவிடும் .

No comments