Breaking News

சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டணியின் புதிய நடவடிக்கை; கட்டார் அதிருப்தி!

கட்டார் – சவூதி கூட்டணி நாடுகளுக்கிடையிலான பிணக்கு அமெரிக்காவை மையப்படுத்தி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக 18 குழுக்கள் மற்றும் தனி நபர்களை பயங்கரவாத கருப்புப் பட்டியலில் இணைத்திருப்பதாக கூட்டணி நாடுகள் அறிவித்திருக்கின்றமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளது கட்டார்.

தமது நாட்டில் இயங்கக்கூடிய அனைத்து ‘பயங்கரவாத’ குழுக்கள் மற்றும் ஆதரவளிப்போருக்கு எதிராகவும் தாமே நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இப்புதிய பட்டியலானது சமரச முயற்சிகளை பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் கட்டார் தெரிவித்துள்ளது.

ஆறு அம்ச சமரச திட்டத்திலும் இணக்கம் காண முடியாத நிலையில் அமெரிக்க மத்தியஸ்த்தம் நாடப்படுகின்றமையும் சவூதி மற்றும் கட்டாருக்கு பல பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments