Breaking News

கத்தார் விவாகரம் சுமுகமான தீர்வு எட்டப்பட்டது புதன்கிழமை கெய்ரோவில் பேச்சுவார்த்தை...!

சவூதி , ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டாருக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னணியில் முன் வைக்கப்பட்ட 13 அம்ச நிபந்தனை தொடர்பில் இன்று நேரடியாகவே குவைத் சென்ற கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சர் கத்தார் அமீரின் பதில் கடிதத்தை அங்கு ஒப்படைத்து விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்கும் குவைத், இது தொடர்பில் ‘திருப்தி’ வெளியிட்டுள்ளதோடு புதனன்று சவூதி தலைமையிலான நாடுகள் கய்ரோவில் இது குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

கத்தாரினால் வழங்கப்பட்ட ‘பதில்’ கடிதம் தொடர்பிலான விளக்கம் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லையாயினும் முட்டுக்கட்டை தளர்ந்துள்ளதாக குவைத் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

புதனன்று இடம்பெறவுள்ள சந்திப்பில் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சரும் கலந்து கொள்ளவுள்ள அதேவேளை அனைத்து நிபந்தனைகளுக்கும் இணக்கம் தெரிவிக்கப்படவில்லையாயினும் விட்டுக்கொடுப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments