Friday, 14 July 2017

சவூதியிலிருந்து விடுமுறையில் நாடு திரும்ப இருந்த இலங்கையர் திடீர் சுகயீனம் காரணமாக மரணம்

தொழில் நிமித்தம் சவூதி அரேபியா சென்ற இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதில் துறைநீலாவணை கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான அழகையா அருணகிரி என்பவரே உயிரிழந்துள்ளார்.
சவூதியில் பணியாற்றி வந்த இவர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் கடந்த ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.
விரைவில் நாடு திரும்ப உள்ளதாக இரு வாரங்களுக்கு முன்னர் குறித்த நபர் தனது உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.(நன்றி -TAMILWIN)

Author: verified_user

0 comments: