Breaking News

ஆளுனர் பதவி கிடைக்காமையின் பின் கத்தாருக்கான இலங்கை தூதுவர் நாளை விசேட உரை!

கட்டாருக்கான இலங்கையின் தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே, நாளைய தினம் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குறுதி மற்றும் கிடைக்காதவை பற்றி அவர் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்ப்பார்த்தவை கிடைக்காதமை காரணமாக, அது தொடர்பில் பொறுப்புடன் கருத்து வெளியிடவுள்ளதாக அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம் அவருக்கு சொந்தமான மயில் மாளிகையில், இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் கருத்து தெரிவிக்கவுள்ளார்.

எதிர்பார்ப்புடன் கட்டாரில் இருந்து தான் இலங்கைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டுக்கு செல்லாமல் இலங்கையிலேயே பதவியொன்றை அவர் எதிர்பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநராக ஏ.எஸ்.பி.லியனகே நியமிக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினம் தேசிய பத்திரிகைகளில் செய்தி வெளியானது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, இன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments