ஆண்களே! இதோ ஆண்மை குறைவு ஏற்படாமல் இருக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்

Published On Saturday, 29 July 2017 | 01:17:00

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் ஹார்மோன். இது ஆண், பெண் என இருவரின் உடலிலும் இருக்கும். ஆனால் இந்த ஹார்மோன் பெண்களுக்கு மிகவும் குறைவாகவும், ஆண்களுக்கு அதிகமாகவும் இருக்கும். இந்த ஹார்மோன் தான் உடல் வலிமையை அதிகரிக்கும் மற்றும் பாலுணர்ச்சித் தூண்டும். 

பொதுவாக இந்த டெஸ்டோஸ்டிரோனின் அளவானது வயதாக குறைந்து கொண்டே வரும். ஆனால் இன்றைய கால இளைஞர்களுக்கு விரைவிலேயே குறைகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது. இதற்காக டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க பல ஆண்கள் மருந்து மாத்திரைகளை எடுத்து வருவார்கள். ஆனால் அதில் கெமிக்கல் கலந்திருப்பதால், அவை பிற்காலத்தில் வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

ஆகவே எடுத்ததும் மருத்து மாத்திரைகளை நாடாமல், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க வேறு என்ன வழி உள்ளது என்று யோசிக்க வேண்டும் இயற்கை வழி என்றால் அது உணவுகள் மூலம் தான் முடியும். ஆகவே உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை ஆண்கள் அன்றாடம் தங்களின் உணவில் சேர்த்து வந்தால், டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு என்ற ஒன்று வராமல் தடுக்கலாம். 

சரி, இப்போது டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டை சரிசெய்யும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!! 

முட்டை 
ஆண்கள் தங்களின் அன்றாட உணவில் முட்டையை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் முட்டையில் உள்ள வைட்டமின் டி டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும். குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் தான் வைட்டமின் டி உள்ளது. எனவே தினமும் ஒரு முட்டையை ஆண்கள் உட்கொண்டு வருவது நல்லது.


பால் 
பால் ஒவ்வொருவரும் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று. பாலில் கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின் டி சத்தும் அதிகம் உள்ளது. இதனால் எலும்புகள் வலிமையடைவதோடு, ஆண்களுக்கு ஏற்படும் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடும் நீங்கும். பூண்டு ஆண்கள் சமையலில் தவறாமல் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், கார்டிசோல் அளவுகள் குறைந்து, டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும். 

அஸ்பாரகஸ் 
அஸ்பாரகஸ் 
ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று அஸ்பாரகஸ். இதில் வைட்டமின் ஈ, போலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் போன்ற டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன. 

இறால் 
கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் வைட்டமின் டி வளமையாக நிறைந்துள்ளது. மேலும் ஆண்கள் இறால் சாப்பிட்டு வந்தால், டெஸ்ரோஸ்டிரோன் அளவு அதிகரித்து, தசைகள் நன்கு வளர்ச்சி அடையும். கடல் சிப்பிகள் கடல் சிப்பிகள் பாலுணர்ச்சியைத் தூண்டுவதில் சிறந்தது. இதற்கு அதில் நிறைந்துள்ள ஜிங்க் சத்து தான் காரணம். இது தான் ஆண் ஹார்மோரன முதிர்ச்சி அடையச் செய்து, டெஸ்ரோஸ்டிரோன் அளவை சீராக பராமரிக்கும். 

அன்னாசி 
உணவு சாப்பிடுவதற்கு முன் அன்னாசிப் பழத்தை ஆண்கள் சிறிது சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள புரோமெலைன் என்னும் நொதி டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து, உணவை எளிதில் செரிக்க உதவும். 

பூசணி விதைகள் 
கடல் சிப்பியைப் போலவே, பூசணி விதைகளிலும் வளமாக ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. ஆகவே அவ்வப்போது இதனை வறுத்து ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுங்கள். 

டார்க் சாக்லேட் 
டார்க் சாக்லேட்டில் நல்ல அளவில் மக்னீசியம், ஜிங்க், கால்சியம், அர்ஜினைன் போன்றவை உள்ளது. இவை டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதோடு, தமனிகளில் இரத்த ஓட்டம் சீராக செல்லவும் வழிவகுக்கிறது. 

சிட்ரஸ் பழங்கள் 
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றை ஆண்கள் அவ்வப்போது உட்கொண்டு வர வேண்டும். ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி மன அழுத்த ஹார்மோன் அளவை குறைத்து, டெஸ்ரோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved