Breaking News

கத்தாரின் பதிலை பெற்றுக்கொண்டோம், சரியான நேரத்தில் தக்க பதில் தருவோம் - சவூதி அறிவிப்பு!

சவுதி அரேபியா, உள்ளிட்ட 3 அரபு நாடுகள் கட்டார் தொடர்பில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டள்ளன.

கட்டார் மீதான தடைகளை நீக்ககுவதற்கு, அந்நாடு 13 நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள 10 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

காலஅவகாசம் முடிவடைந்த நிலையில், மேலும், 48 மணித்தியாலங்கள் அவகாசமாக வழங்கப்பட்டிருந்தது.

குறித்த காலஅவகாசத்திற்கு முன்னரே, குவைத் ஊடக கட்டார் வழங்கியிருந்த பதிலை, நான்கு அரபு நாடுகளும் பெற்றுக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு சரியான நேரத்தில் பதிலளிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பஹ்ரைன், சவுதி அரேபியா,எமிரேட்ஸ், மற்றும் எகிப்த் நாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் இன்று கெய்ரோவில், கட்டாரின் எதிர்கால நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் - www.arabnews.com
தமிழில் - உதயன்
(சவூதி வெளிவிவகார அமைச்சின் Tweet.)

No comments