Tuesday, 25 July 2017

வளைகுடாவுக்கான விஜயத்தில் பெரும் திருப்தி! மேலும் முயற்சிகளைத் தொடர்வோம் - நாடு திரும்பிய துருக்கிய அதிபர்!

வளைகுடாவுக்கான தனது பிரயாணம் ஆக்க பூர்வமானதாகவும், வெற்றிகரமானதாகவும் அமைந்துள்ளதாக துருக்கிய அதிபர் தய்யிப் எர்துகான் இன்று செவ்வாய்க்கிழமை, காலை துருக்கியில் வைத்து தெரிவித்தார். 

2 நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் அங்காராவலிருந்து புறப்பட்ட அவர் முதலில் சவூதி அரேபியவிற்கும், பின்னர் குவைத்திற்கும் சென்று, கடைசியாக நேற்று நன்பகல் கத்தாருக்கு வருகை தந்தார். மேற்படி மூன்று நாட்டு மன்னர்களுடனும்  முக்கிய சந்திப்புக்களை நடாத்தி இருந்தார் என்பது குறிப்பித்தக்கது. 

கத்தார் மற்றும் அரபு நாடுகளுக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டு ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள நிலையில் தனது விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள், திருப்தியளிப்பதாக இன்றைய பாராளுமன்ற கூட்டத்தில் தெரிவித்தார். மேலும் பிராந்தியத்தின் உறுதித்தன்மை மற்றும், சமாதானத்துக்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். 

ஆங்கிலத்தில் - ரயிட்டர்
தமிழில் - உண்மையின் பக்கம்


Author: verified_user

0 comments: