சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணைக் கடத்தி பாலியல் வல்லுறவு கொண்ட ஆட்டோ சாரதி சிக்கினான்

Published On Saturday, 29 July 2017 | 11:01:00

சுற்றுலா வந்த அயர்லாந்து இளம் பெண்ணைக் கடத்திய ஆட்டோ சாரதி, வெள்ளவாய பகுதியில் மறைந்திருந்த வேளையில் வெள்ளவாய பொலிசாரினால் (26-07-2017) கைதுசெய் யப்பட்டுள்ளார்.

எல்லே சுற்றுலா விடுதியொன்றிற்கு சென்றுகொண்டிருந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் ஆட்டோவொன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஆட்டோ சாரதி ஆட்டோ இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதாகக் கூறி பெண்ணின் கணவரை கீழே இறக்கியுள்ளார்.

அதையடுத்து ஆட்டோவில் இருந்த அயர்லாந்து பெண்ணைக் கடத்திச் சென்று அப்பெண் மீது பாலியல் வல்லுறவினை மேற்கொண்ட வேளையில் அப்பெண் ஆட்டோ சாரதியை தள்ளி வீழ்த்தி விட்டு தப்பியோடி பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் புகார்செய்து பண்டாரவளை அரசினர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கின்றார்.

இச்சம்பவத்தின் பின்னர் பொலிஸ் தேடுதலையடுத்து ஆட்டோ சாரதி பிரதேசத்தை விட்டு தலைமறைவாகி, வெள்ளவாயப் பகுதியின் எத்திலிவெல என்ற இடத்தில் மறைந்திருந்த போது தகவலொன்றின் பேரில் வெள்ளவாயப் பொலி சாரினால் கைது செய்யப்பட்டுள் ளார்.

கைது செய்யப்பட்டவர் விசாரணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பண்டாரவ ளைப் பொலிசார் தெரிவித்தனர்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved