Breaking News

வேலைக்காக சென்ற மகனைக் காணவில்லை . பெற்றோர் முறைப்பாடு. - கண்டுபிடிக்க அதிகம் பகிருங்கள்

யாழ்ப்பாணம், நாவாந்துறைக்கு வேலைக்காக சென்ற மகனைக் காணவில்லை என தாயார் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கிறேசியன் பிரேமிளன் (வயது 18) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நாவாந்துறையில் மேசன் வேலைக்காக வந்த இளைஞர் மாலையில் வேலை முடித்து விட்டு வீடு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.

ஒரு வாரமாக மகனைக் காணாமையினால் பெற்றோர் அவரைப் பல இடங்களிலும் தேடிவந்த நிலையில் நேற்று அவரது தாயார் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த இளைஞரை தேடி வருவதாக யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (MN)

No comments