Thursday, 27 July 2017

அஞ்சோம் - அடிபணியோம். அல் அக்ஸா பள்ளிவாசலை கை விடோம். உயிர் தியாகமும் செய்வோம்.

இஸ்ரேல் சர்ச்சைக்குரிய உலோகங்களை கண்டறியும் கருவிகளை அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து அகற்றியபோதும் பள்ளிவாசல் வளாகத்தை புறக்கணிக்கும் பலஸ்தீனர்களில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இஸ்ரேலுடன் ஒருங்கிணைப்பு களை முடக்கிய நடவடிக்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹமூத் அப்பாஸ் அறிவித்துள்ளார்.

"ஜூலை 14 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த நிலைக்கு வாபஸ் பெறும்வரை எந்த மாற்றமும் ஏற் படாது" என்று பலஸ்தீன தலை வர்களுடனான சந்திப்பொன்றுக்கு முன்னர் அப்பாஸ் குறிப்பிட்டார்.

ஜூலை 14 ஆம் திகதி இரு இஸ்ரேலிய பொலிஸார் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து இஸ்ரேல் அல் அக்ஸா வளாகத்தில் பாதுகாப்பு கெடுபிடி களை அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த செவ் வாயன்று மாலை தொழுகைக்கு பின்னர் கிழக்கு ஜெரூசலம் அல் அக்ஸா வளாகத்திற்கு வெளியில் புதிதாக மோதல் வெடித்துள்ளது. இதன்போது வீதிகளில் இருக்கும் வழிபாட்டாளர்களை அகற்ற இஸ் ரேலிய பாதுகாப்பு படை அதிர்ச்சி அளிக்கும் குண்டுகளை பயன்படுத் தியுள்ளது.

கொந்தளிப்பை ஏற்படுத்திய உலோகங்களை கண்டறியும் கருவி களை இஸ்ரேல் அகற்றியபோதும் இஸ்ரேல்தனது பாதுகாப்பு நடவடிக் கைகளை விலக்கிக் கொள்ளாததற்கு எதிர்ப்பு வெளியிட்டே பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைய முஸ்லிம் வழிபாட்டாளர்கள் எதிர்ப்பு வெளி யிட்டு வருகின்றனர்.

உலோகங்களை கண்டறியும் கருவியை அகற்றிய இஸ்ரேல் அல் அக்ஸா வளாகத்திற்கு வெளியில் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட கண்காணிப்பு கெமராக் களை பொருத்தி இருப்பது பலஸ் தீனர்களின் எதிர்ப்புக்கு காரணமாகும்.

பள்ளிவாசல் வளாகத்திற்குள் தொழுகையை ஆரம்பிப்பதற்கு


முன் இஸ்ரேலின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த விபரங்கள் தெரிய வேண்டி இருப்பதாக ஜெரூசலம் தலைமை முப்தி செவ்வாயன்று அறிவித்தார்.தொடர்ந்து பள்ளிவாசலுக்கு நுழைய வேண்டாம் என்று அல் அக்ஸா பள்ளிவாசல் இயக் குனர் ஷெய்க் நஜெஹ் பாகிரத் முஸ்லிம் வழிபாட்டாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த புனிதத் தலத்தின் கவலராக இருக்கும் ஜோர்தானும் இதனை எதி ரொலிப்பதாக செய்தியை வெளியிட் டிருந்தது.

ஜூலை 14 ஆம் திகதிக்கு முந்தைய பாதுகாப்பு நிலைமைக்கு பள்ளிவாசல் வளாகம் திரும்ப வேண்டும் என்று அது கூறியுள்ளது. இந்நிலையில் அல் அக்ஸா வளா கத்திற்கு வெளியில் செவ்வாய்க்கி ழமை இரவு தொழுகைக்காக கூடிய பெரும் திரளானவர்கள் தொழு கைக்குபின்பள்ளிவாசலைபாதுகாக் கும் உறுதி மொழயை உரத்த குரலில் ஒலித்தனர். "அல் அக்ஸா பள்ளிவாச லுக்காக எனது உயிர், பணம், குழந்தைகளை தியாகம் செய்வேன். அல் அக்ஸா பள்ளிவாசலை பாதுகாப் பேன் என்று இறைவனிடம் ஆணை


தெர்ந்துயிட்டு கூறுகிறேன்" என்று அவர்கள் கோஷமிட்டனர்.எனினும் மாலை தொழுகைக்கு பின்னர் இஸ்ரேல்


பொலிஸார் மீது கற்கள் மற்றும் பொருட்களை கொண்டு தாக்க ஆரம்பித்ததை அடுத்து அங்கி ருந்த அனைவரும் கலைக்கப்பட் டதாக இஸ்ரேல் பொலிஸ் பேச் சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது இஸ்ரேலிய தாக்குதலில் 10 வயது சிறுமி உட்பட பலரும் காயமடைந்துள்ளனர்.

பழைய நகரில் லயன்ஸ் கேட் வாயிலில் இருந்த வழிபாட்ட ளர்கள் மீது இஸ்ரேல் எல்லை காவல் பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டுள்ள னர்.

இதில் ஊடகவியலாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களும் காயமடைந்துள்ளனர். கடந்த 10 தினங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த பதற்ற சூழலில் வெள்ளி மற்றும் சனியன்று இடம்பெற்ற வன்மு றைகளில் நான்கு பலஸ்தீனர் மற்றும் மூன்று இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை அல் அக்ஸா பிரச் சினை ஒரு திருப்புமுனை புள்ளி யாக இருப்பதாக ஐ.நாவுக்காக பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் பாதுகாப்புச் சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் நிர்வாகத்தில் இருக்கும் அல் அக்ஸா வளாகத்தை குறுகிய காலத்திற்கு மூடியது, உயிரிழப் புக் கொண்ட துப்பாக்கிச் சூட்டை நடத்திய, சிசிடிவி கெமரா மற்றும் கண்காணிப்பு கருவியை பொருத் தியதன் மூலம் இஸ்ரேல் தொடர்ந் தும் ஆத்திரமூட்டும் நடத்தையில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப் பிட்டார்.

"நாம் தெளிவாக ஒரு திருப்பு முனையில் இருக்கிறோம்" என்று கூறிய அவர், "இவ்வாறு அத்தி ரமூட்டுவது மற்றும் துண்டுவது மற்றொரு சுழற்சியான வன்மு றைக்கு இட்டுச் செல்லும் என்பதை நாம் மீண்டும் மீண்டும் எச்சரிக்கி றோம். அந்த வன்முறை அதிக சிக் கலானதாக இருக்கும்" என்று ரியாத் மன்சூர் கூறினார்.

Author: verified_user

0 comments: