Breaking News

கட்டார் நாட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லை இன்றுடன் நிறைவு...

சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளினால் கட்டார் நாட்டுக்கு முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றுதற்காக வழங்கப்பட்டிருந்த 10 நாட்கள் கால எல்லை இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது.

எனினும் அந்த நிபந்தனைகள் தமது நாட்டின் இறையாண்மைக்கு கடும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக கட்டார் வெளிவிவகார அமைச்சர் அல் - தானி தெரிவித்துள்ளார்.

கட்டார் நாட்டின் அனுசரனையுடன் ஒளிபரப்பப்படும் அல்ஜசிரா தொலைக்காட்டியை மூடல் உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்கனவே அந்த நாடு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments