Saturday, 15 July 2017

ஓடுபாதையில் தீப்பற்றி எரிந்த போர் விமானம்: அதிர்ச்சி வீடியோ இணைப்பு

போர் விமானம் ஒன்று ஓடுபாதையில் கிளம்பிய சில நொடிகளில் தீப்பிடித்து எரிந்த நிலையில், அதன் விமானி பாராசூட் உதவியுடன் தப்பியுள்ளார்.
Belarus நாட்டின் Babruysk நகரில் அமைந்திருக்கும் விமான தளத்தில், போர் ஜெட் விமானங்கள் மூலம் ராணுவ பயிற்சியில் அந்நாட்டு விமான படை வீரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ரஷ்யாவின் MiG-29 ரக விமானம் ஒன்றை விமானி இயக்கத் தொடங்கினார். விமானம் ஓடுபாதையில் கிளம்பிய அடுத்த வினாடி விமானத்தின் பின்பகுதி திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
உடனடியாக விமானி பாராசூட் உதவியுடன் விமானத்திலிருந்து குதித்தார், இந்த காட்சியை விமான தளத்தில் இருந்த நபர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
விமானத்தின் இன்ஜினில் தான் முதலில் தீப்பற்றியது என பின்னர் தெரியவந்தது, விமானம் எப்படி தீப்பிடித்தது என்ற காரணம் இன்னும் வெளிவரவில்லை.
விமானத்தை இயக்கிய விமானிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த பிப்ரவரியில் நடந்துள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் இதுதொடர்பாக விசாரித்து வருகிறது.
ஆனால், தற்போது தான் சம்பவம் குறித்து வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது.

Author: verified_user

0 comments: