Tuesday, 18 July 2017

சவூதியில் குட்டைப் பாவாடையுடன் படமெடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றிய பெண்! பரபரப்புச் சம்பவம்!

சவுதி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் குட்டைப்பாவாடை அணிந்து சமூக வலைதளம் ஒன்றில் வீடியோ பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சவுதியில் பெண்கள் குட்டைப் பாவாடையோ, நவீன ஆடைகளோ அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பர்தா அணிந்து முகத்தையும் தலையையும் முழுவதுமாக மூடிக்கொண்டுதான் வெளியே வரவேண்டும். அதுவே சவுதி அரச சட்டமாகும். அந்த சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சவுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், குட்டைப் பாவாடை அணிந்து, சவுதியின் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு இடத்தில் நடந்து செல்வது போன்ற வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வீடியோ எடுக்கப்பட்ட இடத்தில் இஸ்லாமிய பாரம்பரியத்தை கடுமையாக கடைப்பிடிக்கும் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியுள்ளது. இந்த இளம்பெண்ணிற்கு ஆதராவாகவும் எதிராகவும் ட்விட்டரில் பலர் அவர்களுடைய கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். இளம்பெண் யார் என்பது குறித்து விசாரணை செய்து அவரை கைது செய்யவும் சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






Author: verified_user

0 comments: