Wednesday, 12 July 2017

முதல் தொகுதி பால் மாடுகள் ஜெர்மனியிலிருந்து கத்தாரை வந்தடைந்தன.

எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த 4000 பால் மடுகளில் ஒரு தொகை மாடுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை)கத்தாரை வந்தடைந்துள்ளது. அரபு நாடுகள் கத்தாருடன் தொடர்பை துண்டித்து 5 வாரங்கள் கடந்துள்ள நிலையில் முதல் தொகுதி பால் மாடுகள் சரக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. 
முதல் தொகுதியில் 165 மாடுகள் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த மாடுகளில் இருந்த கிடைக்கு பால் இன்னும் சில தினங்களிலிருந்து உள்ளுர் சந்தைகளில் என்பதாக மிருகங்களை இறக்குமதி செய்யும் நிறுவனமான Power International Holding யின் அதிகாரியொருவர் கருத்து தெரிவித்துள்ளார். 
அடுத்து தொகுதி மாடுகள் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து மூன்று நாளைக்கு ஒரு முறை இறக்குமதி செய்யப்படவுள்ளது. ஒரு மாதத்திற்கும் 4000 பால் மாடுகள் கத்தாரை வந்தடையும் என்தாகவும், நாட்டின் பால் தேவையில் 30வீதத்தை இது நிரப்பும் என்பதாக Power International Holding நிறைவேற்று அதிகாரி Moutaz al-Khayyat அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆங்கிலத்தில் - http://www.gulf-times.com
தமிழில் - உண்மையின் பக்கம்

Author: verified_user

0 comments: