Wednesday, 26 July 2017

கத்தார் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க செல்கின்றார் கத்தார் வெளிவிவகார அமைச்சர்...!

சவூதி, பஹ்ரைன், அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் கூட்டணியுடன் இஹ்வான்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் ஈரானுடனான நெருக்கத்தின் பின்னணியில் முரண்பாடுகளை வளர்த்துக்கொண்டுள்ள கத்தார், தற்போதைய நிலைமையை எடுத்துரைக்க தமது வெளியுறவுத்துறை அமைச்சரை அமெரிக்கா அனுப்புகிறது.

அமெரிக்க அரசியல்வாதிகள், செனட்டர்களுக்கு சூழ்நிலையைப் புரிய வைக்கும் வகையில் அவர்களுடனான முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான் அல் தானி இன்று அமெரிக்கா சென்றுள்ளார்.

கத்தார் மீதான ராஜதந்திர அழுத்தங்களை நீக்குவதற்கு முன்பாக கத்தார் தமது நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என புதிய ஆறு அம்ச கோரிக்கையொன்று கூட்டணி நாடுகளால் முன் வைக்கப்பட்டிக்கின்றமை
குறிப்பிடத்தக்கது.
(Mohamed Hasil)

Author: verified_user

0 comments: