Tuesday, 25 July 2017

கத்தாரில் உணவுத் தட்டுப்பாடு என்று பரவும் வதந்திச் செய்தி தொடர்பாக! பொய்களைப் பரப்ப வேண்டாம்

( Carrifour - அடையாளப்படம்)
நேற்று காலை முதல் கத்தாரில் உணவுத் தட்டுப்பாடு என்று ஒரு செய்தி இணையத்தளங்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகின்றது. முதன் முதலாக எமக்கு இந்தச் செய்தியை இலங்கையின் பிரபல செய்தி இணையத்தளமானத தமிழ்வின் இணையத்தளத்தில் காண முடிந்தது. அதன் பின்னர் எந்த விதமான அச்சும் பிசகாமல் அப்படியே பெரும்பாலான இணையத்தளங்கள் காப்பி பேஸ்ட் செய்து தலைப்பில் சிறிது மாற்றத்தையும், சூபர் மார்க்கத்தில் பொருட்கள் இன்றி இருக்கும் இறாக்கைகளின் படங்களையும் போட்டு பதிவேற்றி வருவதைக் காணமுடியும். 

கடந்த ஜுன் 5ம் திகதிக்குப் பின் கத்தார் என்ற தலைப்பில் வரும் செய்திகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்று பெற்றுள்ளதை அனைவரும் அறிவார்கள். அந்த வரவேற்பை வைத்துக் கொண்டு TRPக்கான கண் மூடித்தனமாக உண்மைகளை வேறுபடுத்தி அறியாது காப்பி பேஸ்ட் செய்வதில் பெரும்பான்மையான இணையத்தளங்கள் இறங்கி இருக்கின்றன. 

அந்த வகையில் பரவும் செய்தி தான்  கத்தாரில் உணவுத்தட்டுப்பாடு என்ற செய்தியாகும். எந்த வித அடிப்டையும், ஆதாரமும் இல்லாத வதந்தியாகும். இந்தச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு வந்திகளைப் பரப்புவதனால் எமது உறவுகள் தான் வெறும் மன உழைச்சல்களுக்கு ஆளாகுவார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

இங்குள்ள மால்கள், சூபர்மார்க்கட்டுக்கள் உட்பட இன்னோரன்ன அனைத்து விற்பனை நிலையங்களிலும்  பொருட்கள் நிரம்பித்தான் இருக்கின்றன. குறிப்பாக சொல்லப் போனால் கடந்த காலங்களை விட தற்போது சந்தைக்கு அதிக பொருட்கள் வருவதன் காரணமாக விலைகள் சரிவடைய ஆரம்பித்துள்ளன. கத்தாரின் மீது சவூதி மற்றும் அரபு நாடுகள் தொடர்பைத் துண்டித்தது ஜுன் 5ம் திகதி. இன்றுடன் 50 நாட்கள் கடந்து விட்டன.  இதுவரையும் ஏற்படாக தட்டுப்பாடு இப்போது ஏற்பட்டுள்ளது என்பதை ஒரு கணம் சிந்திப் பாருங்கள். 

Author: verified_user

0 comments: