Wednesday, 12 July 2017

சவூதி அரேபியாவில் நால்வருக்குத் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!

சவூதி அரேபியா- காதிப் பகுதியில் இடம்பெற்ற தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட  நான்கு சவூதிப் பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக உள்துரை அமைச்சு அறிவித்துள்ளது. 
சஹீர் அப்துல் ரஹீம் ஹுஸைன் அல்-பஸ்ரி, மஹ்தி மொஹம்து ஹஸ்ஸான் அல-செயாஹ், அம்ஜத் நாஜி ஹஸ்ஸான் அல் முஅய்பீத், மற்றும் யூசுப் அலி அப்துல்லா அல்-முஸ்ஹைகீஸ் போன்றவர்களே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் ஆவர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் ஆயுத விற்பனை போன்ற செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபட்டு, அவை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் - www.arabnews.com
தமிழில் - உண்மையின் பக்கம்

Author: verified_user

0 comments: