Breaking News

இந்தியா & ஈரானிலிருந்து கத்தாருக்கு வந்திறங்கிய காய்கறிகளினால் விலைகள் மேலும் வீழ்ச்சியடைந்தன

கத்தார் மற்றும் அரபு நாடுகள் முறுகல் நிலையின் பின்னர் காய்கறிகள் விலைகள் சற்று அதிகரித்த நிலையில் காணப்பட்டன். ஆனால் இந்தியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் இருந்து அதிகளவான காய்கறிவகைகள் இறக்குமதிய செய்யப்படுவதனால் விலைகள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக கத்தார் பிரபல இணையத்தளமான The Peninsula செய்தி வெளியிட்டுள்ளது. 
நேற்றைய தினம் பழைய விமான நிலையத்தில் உள்ள லுலு சூபர்மார்க்கட்டில் தக்காளி ஒரு கிலோ 4 றியால்களாகவும், ஈரானியன் முட்டைக் கோசு 6.50 றியாலாகவும், சீமைச் சுரைக்காய்(Kusa) 6 றியால்களாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
 தற்போது ஈரான், மற்றும் இந்தியா உட்பட துருக்கியிலிருந்து உணவும் பொருட்கள் தருவிக்கப்படுவதனால் விலைகளில் இன்னும் குறைந்து சாதாரண நிலைமைக்கு விரைவில் திரும்பும் என்பதாக கத்தார் வணிகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆங்கிலத்தில் . www.thepeninsulaqatar.com
தமிழில் -உண்மையின் பக்கம்

No comments