Tuesday, 11 July 2017

இலங்கையில் அடைக்கலம் தேடி வந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த கதி! குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்

இலங்கையில் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தரை குறித்த பெண் அடையாளம் காட்டியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்று நுகேகொட மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியதாக குறித்த பெண்ணுக்கு சட்ட உதவிகளை வழங்கி வரும் சட்டத்தரணி சிராஸ் நூர்டின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அடையாளம் காணப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 20ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த மியன்மார் நாட்டைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் மிரிஹான சட்ட விரோத தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள பெண்களில் ஒருவரை கடந்த மாதம் 18ம் திகதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்திருந்ததாக குறித்த பெண்ணால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி சந்தேகத்தின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: