Friday, 28 July 2017

ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று இளம்பெண்கள் கைது! இலங்கை தலவத்துகொடயில் சம்பவம்!

தலவத்துகொட பிரதேச வீடொன்றில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட வீடு ஒன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டது.

அங்கு மூன்று பெண்கள் மற்றும் அதன் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண்கள், கண்டி, கல்லேவெல, பாதுக்க ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 21 முதல் 39 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 39 வயதுடைய பெண்ணுக்கு 4 வயது பிள்ளை ஒன்றும் 21 வயதான பெண்ணுக்கு 4 மாத குழந்தை ஒன்றும் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மற்ற பெண் திருமணமாகாத 29 வயதுடைய பெண் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த வீட்டிற்குள் நுழைவதற்கு 1500 ரூபாய் பணம் அறவிடப்படுகின்ற நிலையில் பாலியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட 6000 ரூபாய் அறவிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Author: verified_user

0 comments: