Breaking News

இலங்கையின் பேருந்து பயணிகளுக்கு விசேட அறிவித்தல்! இன்று முதல் பேரூந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!

அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க கடந்த 20ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.
அந்த வகையில் 6.28 சதவீதத்தில் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்திருந்தது.
இதன்படி 9 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிவேக பாதையின் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து கட்டண திருத்த விபரங்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

No comments