Sunday, 16 July 2017

நீர்கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் உல்லாச விடுதிகள்! 9 பெண்கள் அதிரடியாகக் கைது!

நீர்கொழும்பில் ஒரே நேரத்தில் இரு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட இரு விபச்சார விடுதிகள் குற்றத் தடுப்பு பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பின் போது ஒரு விடுதியில் முகாமையாளர் ஒருவர் மற்றும் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்றைய இடத்தில் பெண் முகாமையாளர்கள் இருவர் உட்பட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Author: verified_user

0 comments: