Friday, 28 July 2017

சவூதி அரேபியா கூட்டணி தீவிரவாதப் பட்டியலில் சேர்த்துள்ள 9 அமைப்பு மற்றும் 9 தனி நபர்கள் விபரம் இதுதான்!

(படத்தில்:- சவூதி மற்றும் கத்தார் மன்னர்கள்)
கத்தார் அரசுக்கு வளைகுடா நாடுகள் புதிய நெருக்கடி அளித்துள்ளன.அமீரகம், பஹ்ரைன், எகிப்து, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கத்தாருடன் ராஜிய உறவை முறித்தன.


தீவிரவாத அமைப்புகளுடன் கத்தாருக்கு தொடர்பு உள்ளது.தீவிரவாதிகளுக்கு கத்தார் நிதி உதவி செய்கிறது.அதனை தடுக்க 13 நிபந்தனைகளை ஏற்கவேண்டும்.என்று நிர்பந்தம் செய்தன. கத்தார் ஏற்க மறுத்தது. இதனால் 6நிபந்தனைகளாக குறைக்கப்பட்டன. அதற்கும் கத்தார் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், தீவிரவாதிகளுடன் தொடர்பு, நிதியுதவி செய்தவர்கள் பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது.
வளைகுடாநாடுகள் இதனை வெளியிட்டுள்ளன.
9தனி நபர்கள், 9நிறுவனங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இப்பட்டியலில் உள்ள விபரம் தொடர்பாக தகுந்த ஆதாரம் உள்ளதாகவும் அநநாடுகள் தெரிவித்துள்ளன.
அவர்கள் மீது என்ன நடவடிக்கை கத்தார் எடுக்கவுள்ளது.
எனவும் வளைகுடா நாடுகள் கேள்வி எழுப்பி உள்ளன.

ஒன்பது தனிநபர்கள் விபரம்:
1.காலித் சயித் அல்பனின் – கத்தார்
2. அஹமது அப்த் அல் ஜலீல்-லிபியா
3.அல் சாதி அப்துல்லா இப்ராகிம்- லிபியா.
4.முகமது பக்ருதின் -ஏமன்.
5.அகமது அலி அகமது – ஏமன்.
6.அப்துல்லா முகமது-ஏமன்
7.ஹமீது ஹமத்-குவைத்.
8.சாலே பின் அகமது -கத்தார்.
9.சாஹிர் ஜூம்மா -கத்தார்.


ஒன்பது அமைப்புகள் விபரம்:
1.அல் பலக் அறக்கட்டளை ஏமன்,
2. அல் இசான் அறக்கட்டளை-ஏமன்.
3.ரஹ்மா அறக்கட்டளை -ஏமன்.
4. பெங்காசி புரட்சியாளர் அமைப்பு-லிபியா.
5.அல் சரயா மருத்துவ மையம் -லிபியா.
6.போஸ்ரா செய்தி நிறுவனம்-லிபியா.
7.ரபல்லா சகாதி படை-லிபியா. 
8.நபா டிவி-லிபியா. 
9. தனாசு அறக்கட்டளை- லிபியா.
(Mohamed Hasil)

Author: verified_user

0 comments: