Monday, 24 July 2017

8 ஆண்டுகளாக காலை உணவை தவிர்த்து வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!

8 ஆண்டுகளாக காலை உணவை தவிர்த்து வந்த பெண் வயிற்றில் இருந்து 200 பித்த நீர்கட்டிகளை டாக்டர்கள் அகற்றி உள்ளனர்.

சீனாவில் ஹொஷூவு பகுதியில் வசித்து வருபவர் ஷென் (வயது 45) இவர் கடந்த 8 ஆண்டுகளாக காலை உணவை தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பித்தப்பையில் பித்தநீர் கட்டிகள் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் இருந்த 200 பித்த நீர்கட்டிகளை டாக்டர்கள் அகற்றினர். 

இது குறித்து அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குவான்வீ வே கூறுகையில்,

காலை உணவை தவிர்த்து வந்ததால் இரைப்பையில் உள்ள அமினோ அமிலங்கள் அதிக அளவில் சுரந்து பித்த நீர் கட்டிகளாக உருமாறி உள்ளது. காலை உணவை தவிர்த்து வந்தால் அவருக்கு பித்த நீர் கட்டிகள் உருவாகியது. காலை உணவை தவறாமல் உண்ண வேண்டும் என கூறினார். பெரும்பாலனவை ஆரம்பத்தில் அவை எந்த அறிகுறியும் தெரியாது. 

அறுவை சிகிச்சை பிறகு ஷென் கூறுகையில்,

கடந்த 10 ஆண்டுகளாக காலை உணவை தவிர்த்து வந்தேன். வேலை முடித்து வீட்டிற்கு வரும் போது சோர்வாக இருப்பதால் இரவு நேரத்தில் உணவு சமைப்பதில்லை. அதனால் காலை நேரத்தில் உணவு உண்ணாமல் அலுவலகத்திற்கு சென்றுவிடுவேன். ஆரம்பத்தில் லேசான வயிற்று வலி ஏற்பட்டது அறுவை சிகிச்சைக்கு பயந்து சிகிச்சை பெறவில்லை. 

இவ்வாறு சிகிச்சை பெற்ற பெண் கூறியுள்ளார்.

Author: verified_user

0 comments: